Wednesday, February 9, 2011
முள்
உனது கூர்மை
சற்று குறைவாய் இருந்திருந்தால்
உன்னைப் பற்றி
எழுதியிருக்க மாட்டேன்
மலரின் பின்புறம்
மறைந்து கொண்டிருக்காவிடில்
உன்னைத் தீண்டியிருக்க மாட்டேன்
இப்போதெல்லாம் மலரைவிட
உன்னையே எனக்கு
அதிகம் பிடிக்கிறது
உனது நோக்கம்
வெளிப்படையானது
வாசமும் வண்ணமும்
அவசியமில்லை அதற்கு
மிக அருகிலிருந்தும்
மலரின் உட்புறம்
அறிய இயலாதவர்கள்
நீயும் நானும் தான்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
என்ன கவிஞரே!
எத்தனை மலர் பறித்தீர்?
இவ்வளவு காயம்....
மலர் ஏதும் பறிக்கவில்லைங்க முத்து.. :)
எப்போ கத்துக்க போறேன்னு தெரியல.. பறிக்க நினைப்பதை விட்டுவிட்டு ரசிக்க ...
Post a Comment