Saturday, April 24, 2010
விருப்பங்கள் விதவிதமாய்...
மழை பெய்யும் போதினிலே
பறவைக் கூட்டிற் கெல்லாம்
குடைபிடிக்க லாகாதா...
வானம் பார்க்கும் வேளையிலே
பட்டாம் பூச்சி யொன்று
பக்கத்தில் அமராதா...
இலைகளுக் கெல்லாம்
சில செல்லப் பெயர்
இட்டழைக்க லாகாதா...
எங்கள் வீட்டு எறும்புகளின்
வாழ்க்கை சரித்திரம்
வாசிக்கக் கிடைக்காதா...
இலையுதிர்ந்த மரங்களை
இறுகத் தழுவி
ஆறுதல் சொல்லக் கூடாதா...
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நண்பரே, உங்கள் அனைத்து கவிதைகளையும் படித்தேன். ரொம்ப நல்லா எழுதறீங்க, தொடர்ந்து நிறய எழுதுங்க, உங்கள் உணர்வுகள் அதை உருவ அமைதியோடு வார்த்தைப்படுத்துவது எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு, ஆனா இந்த ஆறாம் அறிவு கவிதை மட்டும் சத்தம் கூடுதலா பிரச்சார தொனியோடு இருக்கிறது. உங்கள் மற்ற எல்லா கவிதைகளும் மனதோடு மனதாக அமைதியாக மௌனமாக பூடகமாக சொல்லாமல் சொல்வது போல் அழகாக ஒரு வித கவித்துவ மனநிலையை எய்தி வாசிப்பவர்களை கவித்துவ மனநிலைக்கு எடுத்துச் செல்கிறது. ஆனால் இந்த ஆறாம் அறிவு வகையிலான கவிதை மேடையில் வாசிக்கும் கவியரங்கத் தன்மையிலான வானம்பாடி வகைக் கவிதைகள், அதாவது இந்த வைரமுத்து மேத்தா அப்துல்ரகுமான் பா விஜய் வகையறாக் கவிதைகள். இவைகளைத் தாண்டி வாசியுங்கள் நிறய நவீன கவிஞர்களை. உங்கள் மற்ற கவிதைகளில் இந்த நவீன கவிதைக்குரிய அம்சங்கள் இருக்கிறது, இந்த வகையிலான கவிதைகளை நிறய எழுதுங்கள், நிறய வாசியுங்கள். வாழ்த்துகள் உங்கள் இலக்கியப் பயணத்திற்கு.
@ யாத்ரா
மிக்க நன்றி நண்பரே.. உங்கள் கருத்துக்களை மிகவும் வரவேற்கிறேன். நான் மிகவும் இளையவன். நீங்கள் சொல்வது போன்ற நவீன இலக்கிய உலகிற்கு சமீபத்தில் தான் அறிமுகம் ஆனேன். அது குறித்த என் வாசிப்பு அனுபவம் இப்போது தான் வளர ஆரம்பித்துள்ளது. வரும் படைப்புகளில் புதுமையும் செறிவும் நிறையுமென நம்புகிறேன். தொடர்ந்து என் வலைப்பூவை வாசிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
nice one.. romantic
Hey Rajesh, this one is real cute :)..
@yatra: why not kaviyaranga kavidhaigal? whats so bad about them?
Post a Comment