Monday, March 1, 2010

இரவு


உண்ணும்
போதே
கண்கள் செருகி
உறங்கி விழும்
குழந்தைகள் ஒருபுறம்!

உறக்கம் என்பதன்
உதவி வேண்டாது
தொலைக்காட்சியில் தொலைந்த
முகங்கள் ஒருபுறம்!

வீடுகளின் வெளியே
பாயில் படுத்தோர்
பேச்சொலி காற்றில்
கலந்த தொருபுறம்!

எண்ணக் குழியை
மூட முடியாமல்
விழித்துக் கிடந்த
முதுமைகள் ஒருபுறம்!

எப்போதேனும் வீசும்
காற்றில் அசைந்தாட
காத்துக் கிடந்த
மரங்கள் மறுபுறம்!

நிசப்தத்தின் நடுவே
பூச்சிகள் புடைசூழ
இருளொடு போரிடும்
தெருவிளக்குக ளொருபுறம்!

இவ்வளவு பேரையும்
இழுத்துக் கொண்டு
மெதுவாக நகர்ந்தது
இரவின் இருட்கரம்!

8 comments:

Srini said...

the words chosen by you to express your thoughts are excellent :). you seem to have been working out your brain well :). I felt it was a bit short considering the night drags even a lot more people . Like i feel the heaviest burden for night will be people thinking about their lovers and cursing fate for their separation on such a lovely night :) . eagerly waiting for ur next post . cheers :)

Rajesh V said...

@ srini
thanks da.. :) of course, i realize that the burden of carrying along the lovers would be the worst . I particularly wanted to avoid lovers' stuff in this work. but i understand your feelings regarding this :D .. he he

Rajesh V said...

@ srini
karuna called and told me the same opinion. so jus to let u know that u ppl r not alone :) , i would like to quote a poem from silappathikaram.

கூடினார் பால்நிழலாய்க் கூடார்ப்பால் வெய்தாய்க்
காவலன் வெண்குடைபோல் காட்டிற்றே - கூடிய
மாதவிக்கும் கண்ணகிக்கும் வான்ஊர் மதிவிரிந்து
போதுஅவிழ்க்கும் கங்குல் பொழுது.

பொருள்:
மன்னனின் வெண்கொற்றக் குடையானது, நட்போடு சேர்ந்தவருக்கு நிழலைத் தருவதாகவும் பகைமை கொண்டு சேராதவர்க்கு வெம்மையைத் தருவதாகவும் அமைந்தது.அதைப் போன்ற நிலவு, தான் மொட்டுகளை மலரச் செய்யும் இரவுப் பொழுதில், கோவலனோடு சேர்ந்திருந்த மாதவிக்கு இன்பத்தையும் அவனைப் பிரிந்திருந்த கண்ணகிக்கு துன்பத்தையும் அளித்தது.

போது - மொட்டு ; கங்குல் - இரவு

Srini said...

nice one :)

Tamilnila said...

I understood the usage of குறில் there, but I didn't know it was alright to use it that way. Thanks.

Like everybody said, I thought you'd end it with a lover's lament, and it seems very incomplete the way it is. Why is the night slow? Why is it heavy?

Also, I understand, you have used மரங்கள் மறுபுறம் for alliteration, but every line ends with ஒரு புறம் (except the last, of course), and looks like the piece would have been uniform if you had used ஒருபுறம் there too.

குழந்தைகளின் உறக்கத்திலோ, தொலைந்த முகங்களிலோ, அல்லது முதுமையின் ஞாபகத்திலோ, ஆச்சர்யத்தைவிட நடைமுறை வாழ்க்கையின் banality-யைத் தான் காண்கிறேன், which adds character to the night (and it certainly isn't '!').

Good effort, very descriptive; I feel the slow moving night's burden but it still feels incomplete.

What happened to your other blogs? And, please do forgive me for my lack of vocabulary. இனி, தமிழிலேயே பின்னூட்டமிட முயற்ச்சிக்கிறேன்.

Rajesh V said...

Actually, i've also noticed that i could have used 'ஒருபுறம்' there as well. But, i couldn't resist the appearance of a 'மோனை' once i hav got 'மறுபுறம்' in my mind. :)

IMHO,many things may look banal or trivial. But,யதார்த்தங்களிலும் ஆச்சர்யங்களை காண்பதே கவியின் இயல்பு.

I have given links for my other blogposts on the RHS of my blog pages.

Keep visiting my blog... Thanks for the comments :)

Tamilnila said...

Sorry I forgot to mention that I was talking about the banality, to question the usage of exclamation marks at the end of every sentence and not about the content of the piece.

:-)

Rajesh V said...

@ Nila
of course, i knew what you were trying to say.. I was jus trying to figure out a lame excuse for the usage of exclamation marks. :D

Post a Comment